திருச்சியில் விஜய் பிரச்சாரம் முடிந்து சென்றபோது ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதியதில் போலீஸ்காரர் காயம்…!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை, பெரம்பூர் மட்டுமின்றி திருச்சி கிழக்கு தொகுதியிலும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட விஜய் இன்று(ஏப்ரல் 2) திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்த அவர், காந்தி மார்க்கெட், மரக்கடை பகுதியில் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு தொண்டர்கள் மத்தியில் பேசினார். பின்னர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அவரது வாகனத்தை பின்தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அவரது கார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் மீது மோதியதில் காவலரின் கால் எலும்பு முறிந்தது. உடனடியாக அங்கு நின்றிருந்த தொண்டர்கள் அவரை தூக்கிச்சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல திருச்சி விமான நிலையத்திலிருந்து மரக்கடை பகுதிக்கு விஜய் வந்தபோது அவரை பின்தொடர்ந்து டூவீலரில் வந்த பெண் ஒருவர் கீழே விழுந்து காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.