Rock Fort Times
Online News

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் இன்று( மார்ச் 30) சென்னை பெரம்பூரில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டு இருந்தார். அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையா சொத்து – 115 கோடி ரூபாய் ஆகும். அதேபோல விஜய் மனைவி சங்கீதா பெயரில் 15 கோடி அசையும் சொத்தும், 2.5 கோடி ரூபாய் அசையா சொத்தும் உள்ளன. இதன்மூலம் மொத்தம் ரூ.537 கோடி ரூபாய் சொத்து விஜயிடம் உள்ளதாக, பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு – 213 கோடி ரூபாய், ஆக்ஸிஸ் வங்கி சேமிப்பு- 5.79 கோடி ரூபாய். அதேபோல விஜய், சங்கீதா இருவரிடமும் மொத்தம் 500 சவரன் தங்க நகைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 184 கோடி சொத்துக்கு வருமான வரி கட்டி உள்ளார். விஜயின் கையில் 2 லட்சம் ரொக்கமாகக் கையிருப்பு உள்ளது. இதுதவிர விஜயிடம் 4 சொகுசு கார்கள் உள்ளன. ஒரு சாதாரண காரும், ஒரு எக்ஸ்எல் வாகனமும் அவர் பெயரில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்