Rock Fort Times
Online News

கேஸ் இல்லை என்றால் என்ன? விறகு அடுப்பில் சமைத்து பக்தர்கள் பசியை போக்கும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினர்…!

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இங்கு வந்து சிலர் சாப்பிட்டு பசியாறி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது சமையல் கியாஸுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் எங்கே அன்னதானத் திட்டம் தடைபட்டு விடுமோ என்று பக்தர்கள் அச்சப்பட்டனர். இதுகுறித்து யோசித்த கோவில் நிர்வாகத்தினர் கேஸ் இல்லை என்றால் என்ன? விறகு அடுப்பில் சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம் என முடிவு செய்தனர். அதன்படி, விறகு அடுப்பில் சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 3,000 பேருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சாதம், சாம்பார், ரசம், மோர், இரண்டு வகை கூட்டு மற்றும் ஊறுகாய் என அறுசுவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. கோவில் நிர்வாகத்தினரின் இந்த முயற்சிக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்