தமிழகத்தில் ஏற்கனவே பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான முழு ஆண்டு தேர்வு தேதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 6, 7, 8, 9, 13, 16 ஆகிய தேதிகளிலும், 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 1, 6, 7, 8, 9, 13, 16 ஆகிய தேதிகளிலும் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17- ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.


Comments are closed.