Rock Fort Times
Online News

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி உறுதியானது: தொகுதிப் பங்கீடு விவரம்…!

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக இடையே கூட்டணி இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது கூட்டணி உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 23 கடைசி நாளாகும். ஆனால், புதுச்சேரியில் திமுக கூட்டணியிலும் சரி, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியிலும் சரி இழுபறி நீடித்து வந்தது. இதில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. அதேபோல என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் விஜய்யின் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி, புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியாவை இன்று( மார்ச் 20) சந்தித்துப் பேசிய நிலையில் கூட்டணி உறுதியாகியுள்ளது. கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், அதிமுக, பாஜக, லட்சிய ஜனநாயகக் கட்சி 14 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த 14 இடங்களில், பாஜக 10 தொகுதிகளிலும் அதிமுக 2 தொகுதிகளிலும் லட்சிய ஜனநாயகக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே மங்களம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட முதல்வர் ரங்கசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்