Rock Fort Times
Online News

“ரீல்ஸ் நல்லா இருக்கு… அதேபோல படிக்கவும் செய்யணும்”- இன்ஸ்டா பிரபலங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை…!

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவாவை நேரில் அழைத்தார். இரு சிறுவர்களும் இன்ஸ்டாகிராமில் தங்களின் நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்கள். இவர்களின் திறமையை அறிந்த முதல்-அமைச்சர், அவர்களை நேரில் அழைத்து பாராட்டினார். அவர்களின் வீடியோக்களைப் பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர் அவர்களின் கிரியேட்டிவிட்டியை வெகுவாகப் பாராட்டினார். பொழுதுபோக்கு ஒருபுறம் இருந்தாலும், மாணவர்களுக்குக் கல்வியே மிக முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் “ரீல்ஸ் நல்லா போடுறிங்க தம்பி.. அதேபோல நல்லா படிக்கவும் செய்யனும்” என்று அறிவுரை வழங்கினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்