Rock Fort Times
Online News

யாரும் பதற்​றம் அடைய வேண்​டாம்: கேஸ் சிலிண்டர் சப்ளையை சீராக்க பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை: * மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி !

அமெரிக்​கா, இஸ்​ரேல்​-ஈ​ரான் இடையே​யான போர் காரண​மாக இந்​தி​யா​வுக்கு வரவேண்​டிய கச்சா எண்​ணெய் சரக்குக் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​திப் பகு​தி​யில் நிறுத்தப்பட்டுள்​ளன. இதனால் நாடு முழு​வதும் சமையல் கேஸ் சிலிண்​டருக்கு தட்​டுப்​பாடு நில​வுகிறது. இதுகுறித்து திருச்​சூரில் மத்​திய பெட்​ரோலி​யத்​துறை இணை அமைச்​சர் சுரேஷ்கோபி கூறுகையில், ”எல்​பிஜி தட்​டுப்​பாடு தொடர்​பான அனைத்து கேள்வி​களுக்​கும் நாடாளு​மன்​றத்​தில் மத்திய பெட்​ரோலி​யத் ​துறை அமைச்​சர் ஹர்​தீப் சிங் புரி பதில் அளித்​துள்​ளார். ஹார்​முஸ் ஜலசந்தி பிரச்​சினை​யால் இந்தியாவில் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது தொடர்​பாக பல்​வேறு நாட்டுத் தலைவர்களிடம் பிரதமர் மோடி பேசி​யுள்​ளார். இதன்மூலம் நமது நாட்​டுக்கு கூடு​தலாக எல்​பிஜி வரு​வதற்​கான வழிகள் திறக்​கப்​பட்​டுள்​ளன. எல்​பிஜி நெருக்​கடியை கட்டுப்படுத்த மத்​திய அரசு முயற்சி எடுத்து வரு​கிறது. நமது நாட்டில் எரிபொருள் கையிருப்​பு, தேவையை விட கூடு​தலாகவே உள்​ளது. எனவே, எரிபொருள் தட்​டுப்​பாடு அபா​யம் ஏற்​படும் என்று பொது​மக்​கள் கவலைப்​படத் தேவை​யில்​லை. இந்த விஷ​யம் குறித்து யாரும் பதற்றம் அடைய வேண்​டாம். நம்மிடம் பெட்​ரோல், டீசல், கெரசின், எல்​பிஜி போன்​றவற்​றுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட​வில்​லை. சப்ளையை சீராக்க 28% உற்பத்தியை அதிகரித்துள்ளோம். மருத்​து​வ​மனை​கள், மின்​சார சுடு​காடு போன்ற அவசரத் தேவை​களுக்கு தற்​போது எல்​பிஜி விநி​யோகம் செய்​யப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்