Rock Fort Times
Online News

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் திரைப்படம்… ரசிகர்கள் கொண்டாட்டம்! (வீடியோ இணைப்பு)

நடிகர்கள் ரஜினிகாந்தும், கமலஹாசனும் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதன்பிறகு இருவரும் தனித்தனியாக படங்களில் நடித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த், கமலஹாசன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் ‘புரோமோ’ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இருவரும் நடிக்கவுள்ள திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ இன்று(பிப்.21) வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.ராஜீவ்மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்