Rock Fort Times
Online News

சேலத்தில் நாளை( பிப்.13) விஜய் பங்கேற்கும் த.வெ.க. கூட்டம்…* 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி…!

சேலத்தில் நாளை(13-02-2026) த.வெ.க. கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில் கலந்து கொள்ள நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை கூட்டம், நாளை (பிப். 13) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி கார்டன் உள் வளாகத்தில், மதியம் 12 மணி முதல் 3 மணிக்குள் நடைபெற உள்ளது. காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளின் படி இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும். 4,998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. அனுமதிச் சீட்டு பெறாத கழகத் தோழர்களும், பொதுமக்களும் நேரில் வருவதை தவிர்க்க வேண்டுகிறோம். இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் பார்க்க கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்