Rock Fort Times
Online News

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ‘வாபஸ்’: மறு தணிக்கைக்கு பிறகு விஜய்யின் ‘ஜனநாயகன்’ ‘ரிலீஸ்’ ஆக வாய்ப்பு…!

தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் நடித்த கடைசி படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் ரிலீஸ் ஆகவில்லை. திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்த நிலையில், தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மேலும், தனி நீதிபதியிடம் புதிய கோரிக்கையுடன் மீண்டும் அணுக உத்தரவிட்டது. அதன்படி, மனுவை வாபஸ் பெறும் வகையில், படக்குழு தனி நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி ஆஷா, மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். தற்போது ஜனநாயகன் படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அங்கு சில காட்சிகள் நீக்கப்பட்டு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்