Rock Fort Times
Online News

திருச்சி, அண்ணாமலை நகரில் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு விழா…- அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு..!

இந்தியாவின் முன்னணி தங்க மற்றும் வைர விற்பனை நிறுவனமான மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸின் புதிய விரிவுபடுத்தப்பட்ட ஷோரூம் திறப்பு விழா திருச்சி, கரூர் பைபாஸ் ரோடு, அண்ணாமலை நகரில் இன்று (பிப்.6) நடைபெற்றது. இதில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, ஷோரூமின் முதல் தளத்தில் தங்கம் மற்றும் வைர நகைகளின் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதில் டைமண்ட் ஜுவல்ஸ் கலெக்ஷனின் முதல் விற்பனையை ராக்போர்ட் டைம்ஸ் தமிழ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.லெக்ஷ்மி நாராயணனும், ஜெம்ஸ்டோன் ஜுவல்ஸ் கலெக்ஷனின் முதல் விற்பனையை ஜெயம் பில்டர்ஸ் ஆனந்தும், அன்கட் டைமண்ட் ஜுவல்ஸ் கலெக்ஷனின் முதல் விற்பனையை கயல்விழி அறிவழகனும், இந்தியன் ஹெரிடேஜ் ஜுவல்ஸ் கலெக்ஷனின் முதல் விற்பனையை லதா மனோகரனும், ஹேண்ட் கிராஃப்ட் ஜுவல்ஸ் கலெக்ஷனின் முதல் விற்பனையை சுதா பிரபாகரனும், நாகாஸ் ஜுவல்ஸ் கலெக்ஷனின் முதல் விற்பனையை பழனியப்பன் மற்றும் சண்முகம் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.

இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட திமுக பொருளாளர் அந்தநல்லூர் எஸ்.துரைராஜ், அஹமது பிரதர்ஸ் சஃபானா, ஜி.எல்.ரஹமது உள்ளிட்ட தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டு தளங்களுடன் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள ஷோரூமில் விதவிதமான பிரத்தியேக கலெக்ஷன்களில் தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள் விற்பனைக்கு உள்ளன. திறப்பு விழா சலுகையாக வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி வரை ஒவ்வொரு முறை தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், வணிக தலைவர் சபீர் அலி, கிழக்கு மண்டல தலைவர் சுதீர் முகமது, மேற்கு மண்டல தலைவர் நவ்ஷாத், மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸின் திருச்சி கிளை தலைவர் ஜோசப் பியூஸ், துணைத் தலைவர் ஷேக் தாவூத், மண்டல மார்க்கெட்டிங் மேனேஜர் பிரவீன் குமார், திருச்சி கிளை மார்க்கெட்டிங் மேனேஜர் திவாகர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்