மணிப்பூரில் வன்முறையை தூண்டி விடுவதாக முதல்வராக இருந்த பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனிடையே, மணிப்பூர் சட்டமன்ற பாஜக கட்சி தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் யும்னம் கெம்சந்த் சிங் விரைவில் முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

Comments are closed.