Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே துயர சம்பவம்: கார் மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு…!

திருச்சி மாவட்டம் , மணப்பாறை அருகே மஞ்சம்பட்டி பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் 8-ம் வகுப்பு மாணவன் நிஷாந்த் ஆண்டனி (13) படுகாயமடைந்தார். காயமடைந்த மாணவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து மாணவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் மணப்பாறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்