Rock Fort Times
Online News

ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரான தர்மர் எம்பி, ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்…!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (ஜன.24) அதிமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் உடன் இருந்த 3 எம்.எல்.ஏக்களில் தற்போது ஐயப்பன் மட்டுமே அவருடன் உள்ளார்.  அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடங்கியது முதல் ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டவர் தர்மர். அவர் மீண்டும் அதிமுகவில் இணைவார் என்று பரவலாக பேச்சு அடிபட்டது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்று மாலை தர்மர் தலைமையில், ஓபிஎஸ் அணியை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் சிலர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.  அவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி சால்வை அணிவித்து வரவேற்றதுடன் அவர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்