திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில், மாநகராட்சி, வார்டு குழு அலுவலகம்-4, வார்டு எண் 56-க்குட்பட்ட கருமண்டபம் இடுகாடு மயானத்தில் உள்ள எரிவாயு தகன மேடை மூலம் சடலங்கள் எரியூட்டப்படுகிறது. இந்த தகன மேடையில் பழுது ஏற்பட்டுள்ளதால் அதனை மாற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நாளை (25.1.2026) முதல் 29.1.2026 வரை 5 நாட்களுக்கு பிரேத உடல்களை எரியூட்ட இயலாது என்பதால் கருமண்டபம் இடுகாடு மயானம் தற்காலிகமாக மூடப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.