தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட திருச்சி துவாக்குடி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள்… * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் சந்திப்பு!
தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பார்வையிட கல்லூரி மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் இன்றைய( ஜன. 24) சட்ட பேரவை
கூட்ட நிகழ்ச்சிகளை திருச்சி, துவாக்குடியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியின் அரசியல் அறிவியல் பயிலும் மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். இந்த நிகழ்வின் போது, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் மாணவர்கள் கல்வியிலும், சமூக சேவையிலும் சிறந்து விளங்கி, எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

Comments are closed.