முதுபெரும் அரசியல்வாதியும், எம்ஜிஆர் காலத்திலிருந்தே தமிழக அரசியலில் இருந்து வருபவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் “எம்ஜிஆர் அதிமுக” என்கிற பெயரில் புதிய கட்சியை தொடங்க தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர், ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகவும், கருணாநிதி, எம்.ஜி.ஆர்.ஆட்சி காலத்தில் நான்கு முறை அமைச்சராகவும் இருந்தவர். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளில் பயணித்தவர். கடந்த 2014ம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியின் சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். அவர் அரசியல் கட்சி தொடங்குவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. புதிதாக கட்சி தொடங்கும் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி வைத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comments are closed.