மாநிலங்களவை உறுப்பினர் ஆர். தர்மர், ஓ. பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்து செயல்பட முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022-ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மர், இதுவரை ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தனது ஆதரவை அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் பணியாற்றியவர். அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி.யாக 2022-2028 காலகட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக பிளவுபட்டிருந்த போது ஓபிஎஸ் தரப்பில் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். கட்சியிலும், ராஜ்யசபாவிலும் அதிமுகவின் வலிமையை அதிகரிக்க, தர்மர் மீண்டும் இபிஎஸ் அணியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.