Rock Fort Times
Online News

முதல்வர் பதிலுரை; பேரவைக்கு வராமலேயே கூட்டத்தொடரை புறக்கணித்த அதிமுக, பா.ஜ.க!

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.  அதனை தொடர்ந்து ஆளுநர் வாசிக்கவிருந்த தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை அவருக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு வாசித்தார். கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான 21ம் தேதி மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. அதனை கடந்த 2 நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் துறை சார்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலுரை கொடுத்தனர். இந்த நிலையில் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (24-01-2026) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிப்பதாக இருந்தது. ஆனால், அதிமுக, பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் யாரும் சட்டப்பேரவைக்கு வராமல் கூட்டத்தொடரை புறக்கணித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்