Rock Fort Times
Online News

எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒரே மேடையில்… * மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் சுவாரஸ்யம்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் அரசியல் களம் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அதிமுக- பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இன்று(23-01-2026) நடைபெற்றது. இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறின.

* எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் கூட்டணியில் தான் இருக்க மாட்டேன்” என தொடர்ந்து கூறிவந்த டிடிவி தினகரன் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தார். அவர்கள் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். டிடிவி தினகரன் பேசும்போது மதிப்பிற்குரிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி என்று பேசினார். இதனைக் கேட்ட எடப்பாடி பழனிசாமி புன்னகை பூத்தார்.

* பிரதமர் நரேந்திர மோடி எனது அருமை சகோதர சகோதரிகளே… வணக்கம்! என்று தமிழில் தனது பேச்சை தொடங்கினார். பின்னர் ஹிந்தியில் பேச மற்றொருவர் தமிழில் அதனை மொழி பெயர்த்தார்.

* திமுக அரசை CMC என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதாவது C-என்றால் கரப்ஷன், M- என்றால் மாபியா, C- என்றால் கிரிமினல் என்பது அதன் பொருள் என்று விளக்கி கூறப்பட்டது.

* திமுகவுக்கு இதுவே கடைசி தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி வாகை சூடும் என்று இபிஎஸ் பேசினார்.

* அன்புமணி பேசுகையில், திமுக ஆட்சியில் சுமார் 8 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக குறிப்பிட்டதோடு அதன் பட்டியலை வாசித்தார்.

* மதுராந்தகத்தில் பிரதமர் கால் எடுத்து வைத்ததும் சூரியன் மறைந்து விட்டது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்