Rock Fort Times
Online News

“நம் முதல்வர் விசில் அடிக்கும் குஞ்சுகளின் தலைவர் அல்ல”…* சட்டப்பேரவையில் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ…!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பேரவையின் நான்காவது நாளான இன்று (23-01-2026) மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை நீக்கி அதற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த விபி ஜி ராம் ஜி திட்டத்தை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு காந்தி பெயரிலேயே 100 நாள் வேலை திட்டத்தை தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த தீர்மானத்தின் மீது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான செல்வப்பெருந்தகை பேசுகையில்,
“முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. எவ்வளவு நெருக்கடி வந்தாலும், எவ்வளவு தாக்குதல் வந்தாலும் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுகொடுக்க மாட்டேன் என்று தைரியமாக நின்று தமிழ்நாட்டு மக்களின் தலைமகனாக முதல்வர் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த தீர்மானத்தை இந்தியாவிலேயே எந்த சட்டப்பேரவையிலும் கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டு மக்கள் விசில் அடிக்கிற குஞ்சுகள் அல்ல, அந்த கூட்டத்தின் தலைவரும் அல்ல. தன்மான தலைவன் என்பதை இந்த தீர்மானத்தின் மூலம் முதல்வர் நிரூபித்திருக்கிறார்” என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்