ஊழல் படிந்த திமுக அரசுக்கு விடைகொடுக்கும் காலம் வந்துவிட்டது – தமிழகம் வருவதற்கு முன்பு பிரதமர் மோடி பதிவு…!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இந்தநிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று(23-01-2026) தமிழ்நாடு வருகிறார். சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று உரையாற்றுகிறார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெறும் முதல் என்டிஏ பொதுக்கூட்டம் இது என்பதால் இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. என்டிஏ கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று காலை நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு அங்கிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு மதியம் 1.15 மணிக்கு மோடி வருகிறார். பிறகு 2.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, மதுராந்தகத்தில் உள்ள என்டிஏ பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்கிறார். இந்நிலையில்,
இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்து கொள்ளவிருக்கிறேன். ஊழல் படிந்த திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

Comments are closed.