திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளி மூலம் ஆலோசனை…!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் இன்று (ஜன.21) நடைபெற்றது. கூட்டத்தில் கழக நிர்வாகிகளுடன் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். தலைமைக் கழக தீர்மானத்தை ஒட்டி மாவட்ட கழகத்தின் சார்பாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் வீடு வீடாக சென்று மகளிர் பரப்புரை மேற்கொள்வது. தமிழ்நாடு தலைகுனியாது என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்வது. ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ – வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு நடத்துவது. ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரில் திருச்சியில் மார்ச்-8 அன்று நடைபெறும் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதென இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநகரக கழகச் செயலாளர் மு.மதிவாணன், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் சல்மா, சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை. அரங்கநாதன், கே.என்.சேகரன், சபியுல்லா, மாநில அணி நிர்வாகி செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Comments are closed.