கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது 313வது தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று( ஜன.20) காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. அதேபோல திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பேசிய சங்க நிர்வாகிகள், “சத்துணவு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஓட்டு மொத்தம் 10 லட்சத்திற்கும் மேல் உள்ளது. வரவிருக்கும் தேர்தலை தமிழக முதலமைச்சர் கருத்தில் கொண்டு, எங்களது நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டம் மேலும் தீவிரமடையும்” என பேசினர். பின்னர் கோஷங்கள் எழுப்பிய அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Comments are closed.