திருச்சி முன்னாள் எம்.பி.எல்.கணேசன் படத்திறப்பு நிகழ்ச்சி…* அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்று புகழஞ்சலி!
மறைந்த மொழிப்போர் தளகர்த்தரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், திருச்சி முன்னாள் எம்பியுமான எல்.கணேசன் திருவுருவப் படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சையில் இன்று(19-01-2026) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் இணைந்து எல்.கணேசன் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு, “தமிழ் மொழியின் மேல் தீராத பற்று கொண்டு, யாருக்கும் அஞ்சாமல் உண்மையை உரக்கச் சொன்ன போராளி எல்.கணேசன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் நம் கழகத் தலைவர் பேரன்பை பெற்ற அவரது குடும்பத்தினருக்கு திமுக என்றென்றும் உறுதுணையாக நிற்கும்” என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பழநி மாணிக்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், பூண்டி கலைவாணன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.

Comments are closed.