பொங்கல் பண்டிகையான இன்று( ஜன. 15) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது…! கார், டிராக்டர் பரிசாக வழங்கப்படுகிறது!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழகம் முழுவதும் நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையான இன்று(15-01-2026) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.இதில் பல்வேறு காளைகள்இடம்பெற்றுள்ளன. மாடுபிடி வீரர்களும் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்தன. அதனை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர் .சில காளைகள் மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்கிக்கொண்டன. பல காளைகள் அவர்களது பிடியில் சிக்காமல் ஓடின. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.

Comments are closed.