Rock Fort Times
Online News

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது, வெ.இறையன்புக்கு திருவிக விருது… * தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:- அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகனுக்கு 2025-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அ.அருள்மொழி. 2025-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது சிந்தனை செல்வன். எழுத்தாளரும், முன்னாள் தலைமைச் செயலாளருமான வெ.இறையன்புக்கு திருவிக விருது. கவிஞர் யுகபாரதிக்கு தமிழ்நாடு அரசின் 2025-ம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது. காமராஜர் விருது எஸ்.எம்.இதயத்துல்லா. மகாகவி பாரதியார் விருது – கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்