பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 20ம் தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது. பகல் பத்து பத்தாம் நாளில் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு கடந்த 30ம் தேதி நடந்தது. தற்போது ராப்பத்து உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான இன்று(ஜன. 8) தீர்த்தவாரி வைபவம் விமரிசையாக நடைபெற்றது. நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, நீல் நாயக்க பதக்கம், வைர அபயஹஸ்தம், தங்க பூணூல் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்கவாசலை கடந்து சந்திரபுஷ்கரணி வந்தடைந்தார். அதனைத்தொடர்ந்து திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

Comments are closed.