பள்ளிகளுக்கு நாளை(டிச.24) முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கும் நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அனைத்துப் பள்ளி தலைமையாசியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று (டிச.23) முடிவடைகிறது. இதில், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு மற்றும் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் இன்றுடன் தேர்வு நிறைவடைகிறது. நாளை டிசம்பர் 24 முதல் 2026 ஜனவரி 4ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Comments are closed.