Rock Fort Times
Online News

குரூப்–2 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி..!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், 2025ஆம் ஆண்டிற்கான குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மேலும், பிப்ரவரி 8ஆம் தேதி தமிழ் தகுதித் தேர்வும், பிப்ரவரி 22ஆம் தேதி பொதுப் பாடத் தேர்வும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம். முதலில் 645 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், பின்னர் கூடுதலாக 625 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம், குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான மொத்த பணியிட எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்