Rock Fort Times
Online News

புதிதாக 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைப்பு: குஷியில் இல்லத்தரசிகள்…!

திமுக ஆட்சிக்கு வந்ததும் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், நிதி நிலைமை காரணமாக இந்த திட்டம் சற்று கால தாமதமாக தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து, முதல் கட்டமாக சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிருக்கே நேரடியாக சென்றடையும் வகையில் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி கூடுதலாக சுமார் 28 லட்சம் பெண்கள் அரசுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சுமார் 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்க வழங்க அரசு முடிவு செய்து, டிச.12ம் தேதி வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, கூடுதல் மகளிர் பயனடையும் வகையில், இரண்டாம் கட்டமாக இன்று (டிச.12) முதல் வழங்கப்பட உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் கட்டமாக இந்த திட்டத்தை வழங்க உள்ளார். இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2-வது கட்ட விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்