Rock Fort Times
Online News

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அருண் நேரு எம்.பி.சந்திப்பு- * 2 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்!

புதுடெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு சந்தித்து மக்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக 2 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார். இதுகுறித்து அருண் நேரு எம்.பி.வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், புதுடெல்லியில், பொதுமக்களின் வாழ்கையை நேரடியாக பாதிக்கும் இரண்டு முக்கியமான விவகாரங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து முன்வைத்தேன். கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான அவசர திருத்தங்கள் இந்தியா முழுவதும் உள்ள கடன் வாங்கும் பொதுமக்களுக்கு நியாயம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். பிஏசிஎல் லிமிடெட் மோசடியில் தாங்கள் வியர்வை சிந்தி சேமித்த சேமிப்பை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும், குறிப்பாக துறையூர் பெண்களுக்கும், விரைவான பணத்தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்