திருச்சியில் இருந்து 400 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூருக்கு அனுப்பி வைப்பு: மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு…!
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் நாளன்று பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் சில் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இங்கிருந்து இன்று (டிச.9) திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியமான வே.சரவணன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அறையை திறந்து அதனை பார்வையிட்டார். பின்னர், அங்கிருந்து 400 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சியை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.