திருச்சியில் ஜே.எஸ்.டபிள்யூ மற்றும் என்.எம்.கமால் அண்ட் கோ சார்பில் ஸ்டீல் ஃபேப்ரிகேட்டர்களுக்கான ஒருநாள் பயிலரங்கம்… சிறப்பாக நடைபெற்றது!
திருச்சியில், ஜே.எஸ்.டபிள்யூ மற்றும் என்.எம்.கமால் அண்ட் கோ சார்பில் ஸ்டீல் ஃபேப்ரிகேட்டர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் அண்ணாமலை நகர் ஏ.பி.சி மருத்துவமனை அருகில் உள்ள டக் அவுட் ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை என்.எம். கமால் அண்ட் கோ நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர்களில் ஒருவரான கே.பஷீர் அகமது வரவேற்றார். ஜே எஸ்.டபிள்யூ ஸ்டீல் ஏரியா சேல்ஸ் மேனேஜரான கார்த்திகேயன் தலைமை தாங்கினார். என்.எம். கமால் அண்ட் கோ நிர்வாக பங்குதாரர்களான கே.தாஜுதின் அகமது, கே.ரியாஸ் அகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்டீல் ஃபேப்ரிகேஷன் சார்ந்த தொழில் செய்யும் சுமார் 70க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இப்பயிலரங்கத்தில், ரூபிங் சீட்டுகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான ரூபிங் ஷீட்டுகளும், ஸ்டீல் ஃபேப்ரிகேஷன்களும் அமைக்கும் போது எந்தெந்த முறையை கையாண்டால் பாதுகாப்பாக இருக்கும். உறுதி தன்மையோடு ஸ்டீல் பேப்ரிகேஷன் எப்படி செய்ய வேண்டும், மழைக்காலங்களில் ஏற்படும் நீர்க்கசிவை எப்படி தடுக்கலாம். என்பது போன்ற பல பயனுள்ள தகவல்கள் இந்நிகழ்வில் எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் ஜே.எஸ்.டபிள்யூ மற்றும் என்.எம். கமால் அண்ட் கோ சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் என்.எம். கமால் அண்ட் கோ நிர்வாக பங்குதாரரான கே.ரஃபிக் அகமது நன்றி கூறினார்.


Comments are closed.