தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் ‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளன. மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் மதுரை, திருச்சி, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஒரு சில விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அதன் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. சென்னை- மதுரை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.20,599 வரை உயர்ந்துள்ளது. இதேபோல், சென்னை- திருச்சி இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.55,636 வரை உயர்ந்துள்ளது. சென்னை- கோவை இடையே விமான கட்டணம் ரூ.4,351-ல் இருந்து ரூ.24,134 வரை உயர்ந்துள்ளது. இந்த கட்டணத்தைக் கேட்டு பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
***

Comments are closed.