பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான “வெள்ளி யானை” விருது வென்ற அமைச்சர் அன்பில் மகேசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட்டில் அண்மையில் சாரண சாரணியர் இயக்கத்தை சிறப்பாக நடத்தியமைக்காக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ‘வெள்ளி யானை’ விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் குறிப்பில், கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி மணப்பாறையில் BSG டைமந்து ஜூபிலி ஜம்போரி 2025 நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தபோதே இத்தகைய பெருமைகள் அன்பில் மகேஷ்-ஐ வந்து சேரும் என்று கணித்தேன். இப்போது பெருமை கொள்கிறேன்! வேற்றுமைகளைக் கடந்து மாணவர்களின் உள்ளத்தில் ஒற்றுமையை வளர்த்திடும் சாரண, சாரணியர் இயக்கத்தில் பங்கெடுக்கும் மாணவர்கள், மக்கள் மீதான பற்றே உண்மையான நாட்டுப்பற்று என்பதையுணர்ந்து நடைபோட்டுப் பெருமைகள் பல அடைய வேண்டும்! என தெரிவித்துள்ளார்.

Comments are closed.