Rock Fort Times
Online News

ரூ.81.72 கோடி திட்ட மதிப்பீட்டில் திருச்சி பஞ்சப்பூர்-கருமண்டபம் புறவழிச்சாலை அமைக்கும் பணி: மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆய்வு…!

திருச்சி, பஞ்சப்பூரில் ரூ.408 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் பஞ்சப்பூரிலிருந்து திண்டுக்கல் சாலை கருமண்டபத்தை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை தொகுப்பு-I கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் ரூ.81.72 கோடி திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியினை திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இன்று (26.11.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தப் பணிகள் 2026 ம் ஆண்டு முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மேயர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், மண்டல தலைவர் துர்காதேவி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்