தென்காசியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி- * முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று(24-11-2025) 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 30- க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்குள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.