தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ஆளும் கட்சியின் சதி தான் காரணம் என்றும், புரட்சி வெடிக்கும் என்றும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையான நிலையில் உடனே அந்த பதிவை நீக்கினார். இதனால், அவர் மீது கலவரத்தை தூண்டுதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.