Rock Fort Times
Online News

விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் 23, 24-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம்…!

விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வருகிற 23, 24ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுதொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல், நிவாரணம் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை. கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு மத்திய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் 23.11.2025 அன்று தஞ்சாவூரிலும், 24.11.2025 அன்று திருவாரூரிலும் காலை 10 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்