Rock Fort Times
Online News

திருச்சியின் பிரபல வழக்கறிஞர் காஜா மொய்தீனின் தந்தை காலமானார்…!

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞரான ஜெ.காஜா மொய்தீன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெ.அசாருதீன் ஆகியோரின் தந்தையான கே.ஜாபருல்லா இன்று (நவ.19 )மதியம் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவரது இறுதி தொழுகை நாளை மதியம் ஒரு மணிக்கு திருச்சி வயலூர் ரோடு தெற்கு ராமலிங்க நகரில் அமைந்துள்ள அல் அமீன் பள்ளிவாசலில் நடைபெறும். இதனைத்தொடர்ந்து நல்லடக்கம் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பென்சனர் தெரு பள்ளிவாசலில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்