Rock Fort Times
Online News

கோவை வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன்…!

கோவையில், தென்னிந்திய இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாடு- 2025 இன்று(19-11-2025) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடியை கோவை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வரவேற்றனர்.

வரவேற்பினை ஏற்றுக் கொண்ட பிரதமர் அவர்களிடம் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர், தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்து, நாடு முழுவதும் உள்ள 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ₹18,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பி.எம்.கிசான் திட்டத்தின் 21-வது தவணையை விடுவித்தார். மேலும், ஆயிரக்கணக்கான விவசாயிகள், இயற்கை வேளாண்மையை பின்பற்றுவோர், விஞ்ஞானிகள் மற்றும் பங்குதாரர்களிடையே பிரதமர் கலந்துரையாடினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்