Rock Fort Times
Online News

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை…!

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி, புத்தூர் நான்கு ரோடு சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி   சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் தலைமையில், அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினை சார்ந்த மூத்த பெண் நிர்வாகிகள் ருக்குமணி, ஜக்குபாய், லட்சுமி ஆகியோருக்கு “இரும்பு பெண்மணி அன்னை இந்திரா – 2025 ” விருதினை அமைச்சர் வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில், புத்தூர் கோட்ட தலைவர் மலர் வெங்கடேசன், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, மாவட்ட பொருளாளர் முரளி, சிறுபான்மை பிரிவு முதன்மை செயலாளர் பேட்ரிக் ராஜ்குமார், புத்தூர் சார்லஸ், பட்டேல், சத்தியநாதன், சிவா, வைத்தியநாதன், பூக்கடை பன்னீர், கோட்ட தலைவர்கள் உறையூர் பாக்கிய ராஜ், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், மார்க்கெட் பகதூர்ஷா, மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, தில்லைநகர் ராகவேந்திரன், ஏர்போர்ட் கனகராஜ், சுப்ரமணியபுரம் எட்வின், முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகரன் , எஸ்சி பிரிவு கலியபெருமாள், கலை பிரிவு அருள், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், இந்திரா தோழி மாரீஸ்வரி, மனித உரிமை பிரிவு ஆறுமுகம், மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், அஞ்சு, சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தீன், வார்டு தலைவர்கள் புயல் கிருஷ்ணன், கோகிலா, பூபாலன், சம்பத், ஆபிரகாம், செல்வம், லட்சுமணன், மூர்த்தி, சையது, சம்பத், குரு மாணிக்கம், நடராஜன், சங்கரன், மணி, சுப்புராஜ், வெங்கடேஷ், பெல்ட் சரவணன், கண்ணன், பாண்டியன், ஆனந்த பத்தபநாதன், லட்சுமியம்மாள், கிஷோர், ரபிக், பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்