தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு இன்று(நவ. 8) மதியம் வருகை தந்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து பொதுச்செயலாளர் ஆனந்த் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்துடன் சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தவெக மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சாலை மார்க்கமாக காரில் தனது குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார்.இது குறித்து ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் கூறும்போது, உறவினர் துக்க நிகழ்வுக்கு செல்வதாக கூறினார்.

Comments are closed.