தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள், கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நாளை நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” நாளை (09-11-2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்ததுள்ளார்.

Comments are closed.