எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்…* திருச்சி கலெக்டரிடம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மனு…!
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி இம்மாதம் நவம்பர் 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்) நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தினால் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, வாக்குச்சாவடி அலுவலர்களை மட்டுமே பயன்படுத்தி எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணனிடம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், பரஞ்சோதி, ஜெ.சீனிவாசன் ஆகியோர் மனு அளித்தனர்.

Comments are closed.