திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” குறித்த ஆலோசனை கூட்டம்…* அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் நகர் பகுதி, 63-வது வார்டு பாகம் எண் 233, பெருமாள்கோவில் தெரு, பாலக்கரை பகுதி 50 ஏ, பாகம் எண் 150 காவிரி தியேட்டர் அருகிலும், அரியமங்கலம் பகுதி 31அ வார்டு பாகம் எண் 121 கல்பாளையம் மைதானம், மார்க்கெட் பகுதி வார்டு 20 ஏ, பாகம் எண் -109 மணிமண்டபம் சாலை, மலைக்கோட்டை பகுதி, வார்டு –12 ஏ, பாகம் எண் – 12 மேலச்சிந்தாமணி காவேரி நகர் ஆகிய பகுதிகளில் “என் வாக்குச்வாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், தொகுதி பார்வையாளர் கதிரவன், பகுதி கழகச் செயலாளர்கள் மணிவேல், ராஜ் முஹம்மது, மோகன், பாபு, விஜயகுமார், வார்டு செயலாளர்கள் கலியமூர்த்தி, ஞானசேகர், சாகுல், செந்தில்குமார், சுருளிராஜன், ஜெயச்சந்திரன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நம் ஆட்சியின் பயன்களை பெற்ற பயனாளிகளை அடையாளம் காண வேண்டும். சரியான புதிய வாக்காளர்களை சேர்க்கவும், போலியான வாக்காளர்களை நீக்கவும் துரிதமாக பணியாற்ற வேண்டும். இல்லங்கள் தோறும் அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். எஸ்.ஐ.ஆர்.போன்ற ஜனநாயக விரோதப் போக்கை எதிர்கொள்ள கழகத்தின் பிஎல்ஏ 2, பி.எல் சி.மற்றும் பி. டி.ஏ.ஆகியோர் ஆற்ற வேண்டிய பணிகளையும் எடுத்துரைத்தார்.

Comments are closed.