தேவர் ஜெயந்தியையொட்டி அவருடைய சிலைக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை…!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழா இன்று( அக். 30) நடைபெறுகிறது. இதையொட்டி, மதுரையில் இருந்து துணை ஜனாதிபதி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் சென்றார். அங்கு முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது பா.ஜ.க.மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா ஆகியார் உடனிருந்தனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்:
அதேபோல, மதுரை கோரிப் பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் கே. என்.நேரு, இ.பெரியசாமி, கே. கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கீதா ஜீவன், பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா, கனிமொழி எம்பி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Comments are closed.