திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே உள்ள சிறுகாடு கரையில் உள்ள ஒயின் ஷாப்பின் பின்புறத்தில் அமைந்திருந்த வாழை கிடங்கில் ஒரு முதலை பதுங்கி இருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுகாடு கரையில் பதுங்கி இருந்த முதலையை லாவகமாக மடக்கிப் பிடித்தனர். பின்னர் அந்த முதலையை கயிறு கட்டி பாதுகாப்பாக எடுத்துச் சென்று முக்கொம்பு பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விடுவித்தனர். முதலை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும், வனத்துறையினரை வெகுவாக பாராட்டினர். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அந்த வெள்ளத்தில் முதலை எங்கிருந்தோ அடித்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபோல முதலை மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருந்தால் உடனே வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments are closed.