திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளிலும் சிறப்பு வார்டு சபை கூட்டம்: 27- வது வார்டில் மேயர் மு.அன்பழகன் பங்கேற்பு…!
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் சிறப்பு வார்டு சபை கூட்டம் இன்று (அக்.29) நடைபெற்றது. மண்டலம் 5-க்கு உட்பட்ட வார்டு எண் 27-ல் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் பங்கேற்றார். ஆட்டுமந்தை திறந்தவெளி உடற்பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு வார்டு சபை கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதேபோல, அந்தந்த வார்டு பகுதிகளில் மண்டல தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் சிறப்பு வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இந்த கூட்டங்களில், மழை நீர் வடிகால்களை தூர்வாருதல் மற்றும் மழை நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல், தூய்மை பணிகளை மேம்படுத்த பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்துதல், நீர் நிலைகள் மாசு ஏற்படாமல் இருக்கவும் நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பொது மக்களிடம் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் கேட்டறியப்பட்டது.

Comments are closed.